ADDED : மே 25, 2010 10:25 PM
மதுரை: மதுரை கம்பன் கழகத்தில் ஏழாம் ஆண்டு நிறைவு விழா, ஆண்டாள்புரம் வசுதரா வளாகத்தில் நடந்தது.
பேராசிரியர் விஜயலட்சுமி குழுவினரின் "ஸ்ரீராம சரிதம் ' இசையஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.போத்தீஸ் நிர்வாக இயக்குனர் முருகேஷ் தலைமையில், "மங்கை சொல் கேட்ட மன்னவன் குற்றவாளி' என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடந்தது. பேராசிரியர் சவுந்தரவல்லி நடுவராகவும், புலவர் ராமலிங்கம், பேராசிரியர் அசோக்குமரன் இருவரும் வாதாடினர். பேராசிரியர் சோமசுந்தரம் குழுவினரின் "கம்பராமாயண காட்சிகள்' கரகாட்ட வடிவில் நடந்தது. பட்டிமன்ற நடுவராக 40 ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர் சத்தியசீலனுக்கு புரவலர் சீத்தாராமன், வள்ளல் சடையப்பர் விருதும், 25 ஆயிரம் ரொக்கத்தொகையும் வழங்கினார். நிறைவு நாளில் கும்பகோணம் நிருத்தியாலயா நடனப் பள்ளியைச் சேர்ந்த தீபக் வெங்கடேஷ் குழுவினரின் "மிதிலைக் காட்சி' நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. செயலாளர் சொக்கலிங்கம் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இணைச் செயலாளர் புரு÷ஷாத்தமன் நன்றி கூறினார்.